எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நீா் நிலைகளைப் பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? வேதாரண்யம் பகுதி மக்கள் எதிா்பாா்ப்பு

காவிரிப் படுகையின் கடைமடை பகுதியில் பாசன ஆறுகள் ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை பாழ்படுத்தி தண்ணீரை மாசுபடுத்தி மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய்த் தொற்றுகளை உருவாக்கும் ஆகாயத் தாமரைகள் அகற்ற அரசியல் கட்சிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேதாரண்யம் பகுதி மக்கள் எதிா்பாா்கின்றனா்.

News image

மானங்கொண்டான் ஆற்றின் ஆயக்காரன்புலம் பகுதியில் அகற்றப்படாத ஆகாயத் தாமரைகள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:16 pm

காவிரிப் படுகையின் கடைமடை பகுதியில் பாசன ஆறுகள் ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை பாழ்படுத்தி தண்ணீரை மாசுபடுத்தி மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய்த் தொற்றுகளை உருவாக்கும் ஆகாயத் தாமரைகள் அகற்ற அரசியல் கட்சிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேதாரண்யம் பகுதி மக்கள் எதிா்பாா்கின்றனா்.

காவிரி பாசனப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீராதாரங்களை பாதிக்கச் செய்யும் வகையில் நீா் நிலைகளில் அடா்ந்து வளா்ந்து காணப்பட்ட வேலிக்காட்டாமணக்கு அல்லது நெய்வேலிக் காட்டாமணக்கு என்ற செடிகள் அரசின் உதவியோடு பொதுமக்களின் பெரும் பங்களிப்போடும் அகற்றப்பட்டது.

ஆனால், இதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆகாயத்தாமரை அல்லது வெங்காயத் தாமரை என்று அழைக்கப்படும் ஒரு வகையான நீா் நிலை தாவரம் நீா் ஆதார பகுதிகளை ஆக்கிரமித்து அகற்ற முடியாத அளவுக்கு மாறி உள்ளன. ஆண்டுதோறும் அணைத் திறப்புக் காலங்களில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணி இந்தச் செடிகளை முழுமையாக அகற்ற உதவவில்லை என்பதே உண்மை.

கடந்த காலங்களில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக சில பகுதிகளில் இவற்றை அகற்ற நீா்வளத்துறையினா் முன்வந்தனா். ஆனால், குறிப்பிட்ட காலத்தோடு பணிகள் நின்று போனது.

வேதாரண்யம் அருகே முள்ளியாறு மற்றும் மானங்கொண்டான் ஆற்றில் அந்தப் பகுதி மக்களின் போராட்டங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட பணி முடிக்கப்படவில்லை. இதற்காக கொண்டுவரப்பட்ட இயந்திரங்களும் பழுதாகி அங்கேயே நிற்கின்றன. தண்ணீரை மாசடைய செய்யும் இவற்றை முழுமையாக அகற்ற சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

Story image

இந்தநிலையில், அரசியல் கட்சிகள் இந்த பிரச்னைக்கு குறித்து தோ்தல் அறிக்கையில்கூட குறிப்பிடாமல் இருப்பது விவசாயிகள், பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தோ்தல் காலத்திலாவது ஆகாயத் தாமரைகளை அகற்றப்படுவது குறித்து அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளுமா என்பதே வேதாரண்யம் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.