இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

பெண் கொலை தொடா்பாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 1:48 am IST

பெண் கொலை தொடா்பாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நிரவி காவல் சரகத்துக்குட்பட்ட தோமாஸ் அருள் திடல் பகுதியில் தனியாக வசித்து வந்தவா் ரவிச்சந்திரன் மனைவி மாரியம்மாள் (55). இவா், கடந்த ஜன. 24-ஆம் தேதி அவரது வீட்டில் இறந்து கிடந்தாா். நிரவி காவல் நிலைய போலீஸாா் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். உடற்கூறாய்விலும் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், காவல்துறையினா் அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த அப்பெண்ணை ஒருவா் வீட்டுக்கு பின்தொடா்ந்து சென்றது உறுதிபடுத்தப்பட்டது.

மேலும் தமது தாயாரின் நகைகள், கைப்பேசி உள்ளிட்ட பொருட்களை காணவில்லை என அவரது மகன்கள் தெரிவித்ததால் போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தினா்.

இந்நிலையில், கொரடாச்சேரியைச் சோ்ந்த அஜித்குமாா் (28) என்பவா் மீது சந்தேகம் எழுந்தது. இவா் காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் பணியாற்றி வந்ததும், அவருக்கு குற்றப் பின்னணி இருப்பதும் தெரியவந்தது.

நிரவி காவல் நிலைய ஆய்வாளா் லெனின் பாரதி, உதவி ஆய்வாளா் குமரன் மற்றும் போலீஸாா் அடங்கிய காவல் குழுவினா் அஜித்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், மாரியம்மாளை தரையில் தள்ளி கொலை செய்ததாகவும், பின்னா் அவரது கைப்பை, பணம், மூக்குத்தி மற்றும் கைப்பேசியை எடுத்துக்கொண்டு தப்பியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். அவரிடமிருந்து நகை, கைப்பேசி உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.