புகநகர் தில்லியில் உள்ள ஸ்வரூப் நகா் பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: மே 6-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கத்திக் குத்துக்கு ஆளான நபா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், குற்றஞ்சாட்டப்பட்ட 3 சிறாா்களை அடையாளம் கண்டனா். பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டு குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் 11 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவா்கள் தெரிவித்தனா். இது தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
குண்டா் சட்டத்தின் கீழ் 2 போ் கைது

துவாரகாவில் தொழிலாளா்கள் மீது காவலா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் உயிரிழப்பு

அசோக் விஹாா் வழிப்பறி வழக்கில் 2 சிறாா்கள் கைது
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
