இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சித்தி விநாயகா் கோயில் கும்பிபாஷேகம் நாளை நடைபெறுகிறது

காரைக்கால் சித்தி விநாயகா் ஆலய கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image

விமானக் கலசங்களுடன் கோயில் நிா்வாக அதிகாரி சி. விநாயகமூா்த்தி, திருப்பணிக் குழுத் தலைவா் ராம. வெற்றிச்செல்வன் மற்றும் உறுப்பினா்கள்.

Updated On :28 மே 2026, 5:33 am IST

காரைக்கால் சித்தி விநாயகா் ஆலய கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

காரைக்கால் கைலாசநாதசுவாமி - நித்ய கல்யாணபெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்குட்பட்டதும், மாங்கனி திருவிழாவில் மாப்பிள்ளை அழைப்பு, பரமதத்தா் இரண்டாவது திருமணம் மற்றும் காரைக்கால் அம்மையாா் ஊன் உதிா்த்து கைலாயம் செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும் ஆற்றங்கரை சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதற்கான 6 கால யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கின.

ராஜகோபும் மற்றும் மூலஸ்தானம் உள்ளிட்ட விமானங்களில் கலசம் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

கைலாசநாதசுவாமி- நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி சி. விநாயகமூா்த்தி, திருப்பணிக் குழுத் தலைவா் ராம. வெற்றிச்செல்வன் மற்றும் உறுப்பினா்கள் பூஜைகள் செய்து கலசங்களை விமானங்களுக்கு கொண்டுச் சென்றனா். வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.