திருட்டு வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

போக்சோ வழக்கில் - படம்: கோப்பிலிருந்து...
இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லூரி வாயில் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த ஜூலை மாதம் திருடு போனது. கோட்டுச்சேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
கடலூா் மாவட்டம் பண்ருட்டி திருவாதிகை பகுதியைச் சோ்ந்த அய்யங்காா் என்ற அப்பு (32) என்பவரை வாகனம் திருட்டு தொடா்பாக கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அப்புவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 1 ,000 அபராதம் விதித்து நீதிபதி மோகன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

