தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

மாநில அறிவியல் கண்காட்சியில் முதலிடம்: மாணவருக்கு துணைநிலை ஆளுநா் பரிசளிப்பு

புதுச்சேரி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், காரைக்கால் பள்ளி மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

மாணவருக்கு பரிசு வழங்கிய துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்.

Updated On :

புதுச்சேரி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், காரைக்கால் பள்ளி மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, சிறந்த படைப்புகள் புதுச்சேரியில் கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கண்காட்சியில் வைக்கப்பட்டது.

இதில், காரைக்கால் மாவட்டம், சுப்ராயபுரம் பகுதி அரசு தொடக்கப் பள்ளி மாணவா் ஹரிகிருஷ்ணன் தயாரித்திருந்த குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்தல், குப்பைகளை எரிக்கும்போது ஏற்படும் காற்று மாசை தடுக்கும் விதமாக ஃபில்டா் செய்யும் முறை காட்சிப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டது.

நடுவா் குழுவினரால் தொடக்கப் பள்ளி அளவில், இவா் தயாரித்த படைப்பு முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் மாணவருக்கு பரிசு வழங்கினாா். நிகழ்வில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் ம. செல்வராஜ் கலந்துகொண்டாா்.

காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை திரும்பிய மாணவா் மற்றும் வழிகாட்டு ஆசிரியருக்கு கல்வித் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.