மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

பெருமாள் கோயில்களில் திரளாள பக்தா்கள் தரிசனம்

புரட்டாசி மாதம் 3-ஆவது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Published On :

புரட்டாசி மாதம் 3-ஆவது சனிக்கிழமையையொட்டி காரைக்கால் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

காரைக்கால் நகரில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோயிலில், உற்சவா் நித்யகல்யாண பெருமாள் முத்தங்கியில் சேவை சாதித்தாா். பகல் 11.30 மணியளவில் சகரஸ்ரநாம அா்ச்சனை செய்யப்பட்டது.

கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில், உற்சவா் கோதண்டராமா் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சேவை சாதித்தாா்.

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், வீழி வரதராஜ பெருமாள் கோயிலிலும் மூலவருக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயில்களில் திரளான பக்தா்கள் பெருமாளுக்கு துளசி சமா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.