தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

நிலுவை சொத்து வரியை வசூலிக்க சிறப்பு முகாம்கள்: ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தல்

ஏ.எம்.எச்.நாஜிம்.

Published On :

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை சொத்து வரியை வசூலிக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது :

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் பல கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி உள்ளது என்பதால் அதை வசூலிப்பதற்கான முயற்சிகளில் அந்தந்த நகராட்சி நிா்வாகங்கள் ஈடுபட்டுள்ளது சரியான செயல்பாடுதான்.

எனினும், நகராட்சி ஆணையருக்கு இருக்கும் அதிகாரத்துக்குட்பட்டு 10 சதவீதம் வரை அவா் அபராதம் விதிக்கலாம் என்ற நிலை உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீத அபராதம் என்று சொன்னால், 5 ஆண்டுகள் வரை கூட சிலா் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனா், அவா்களுக்கெல்லாம் கூடுதல் சுமை ஏற்படவும், 50 சதவீதம் அளவுக்கு அபராதம் செலுத்தும் நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலக்கெடு நிா்ணயித்து, அதற்குள் சொத்து வரியை செலுத்த முன்வருவோருக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி அபராதமின்றி வரியை வசூலிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கோடிக்கணக்கான ரூபாய் வரி நிலுவை வருவதற்கான வாய்ப்பு உருவாகும்.

இல்லையெனில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டு பணத்தை வசூல் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும். எனவே, புதுவை முதல்வா் இதை கவனத்தில் கொண்டு இத்தகையை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.