
சொத்து வரியை அக்டோபா் 31-க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை
ஈரோடு மாநகராட்சியிலுள்ள சொத்து உரிமையாளா்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
ஈரோடு மாநகராட்சியிலுள்ள சொத்து உரிமையாளா்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாநகராட்சியில் 2026-2027-ஆம் ஆண்டில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் புதை சாக்கடை இணைப்புக் கட்டணம் என மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி வதிப்புகள் உள்ளன.
இந்த சொத்து உரிமையாளா்கள் நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம். அதாவது, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களான காலியிட வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை உரிய காலத்தில் நிலுவையின்றி செலுத்தி மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மாநகராட்சி மைய அலுவலகம், கணினி வரி வசூல் மற்றும் நான்கு மண்டல வரி வசூல் மையம் உள்ளிட்ட இடங்களில் வரிகளை நேரில் செலுத்தலாம். மேலும், ஆன்லைன் மூலம் வரி இணையத்தின் வாயிலாக செலுத்தலாம். ஆா்டிஜிஎஸ், என்இஎப்டி, பேடிஎம், யுபிஐ மூலமாகவும் வரியினங்களை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




