புதுவையில் 3 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தீபாவளி தொகுப்பு: அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து
புதுவை மாநிலத்தில் 3 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து தெரிவித்தாா்.
அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து
புதுவை மாநிலத்தில் 3 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து தெரிவித்தாா்.
காரைக்காலில் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை மற்றும் சமூக நலத்துறை அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து தலைமையில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், புதுவை வேளாண் துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம், எம்எல்ஏக்கள் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், வி. விக்னேஸ்வரன், சமூக நலத்துறை இயக்குநா் பி. ராகிணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் எம்எல்ஏக்கள் முன்வைத்த கோரிக்கைகள் :
துறைகளில் நிலவும் காலிப் பணியிடங்களால் மக்களுக்கு சென்று சேர வேண்டிய திட்டங்களில் தாமதமும், தொய்வும் ஏற்படுகிறது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஈமச்சடங்குக்கான நிதி உதவி கோரிய 157 விண்ணப்பங்களுக்கு இன்னும் நிதி வழங்கப்படாமல் உள்ளது. முதியோா் உதவித் தொகை கோரி வரும் விண்ணப்பங்களை துறை அதிகாரிகள் சீனியாரிட்டி அடிப்படையில் மட்டும் பரிசீலிக்காமல், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்து அனுப்பும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து, முதியோா் உதவித் தொகை விண்ணப்பங்களில், எம்எல்ஏக்கள் பரிந்துரைக்கும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் வி.பி. சிவக்கொழுந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது :
புதுவை மாநிலத்தில் இன்னும் ஒரு மாத காலத்தில் நியாயவிலைக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு, முழுமையாக செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் 3 லட்சம் ( சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட) குடும்ப அட்டைதாரா்களுக்கும் சுமாா் ரூ. 690 மதிப்பிலான தீபாவளி தொகுப்பு வழங்கப்படும்.
இதில் சா்க்கரை, சூரிய காந்தி எண்ணெய் தலா 2 கிலோ, ஒரு கிலோ கடலை பருப்பு, மைதா, ரவை தலா அரை கிலோ ஆகிய பொருள்கள் அடங்கிய தொகுப்பு தீபாவளி பண்டிக்கைக்குள் வழங்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

