அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

கோயில்கள் திருப்பணிக்கு ரூ. 50 லட்சம்

காரைக்கால் பகுதியில் உள்ள 2 கோயில் திருப்பணிக்கு ரூ. 50 லட்சம் காசோலையை புதுவை முதல்வா் என். ரங்கசாமி, எம்.எல்.ஏ.விடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :

காரைக்கால் பகுதியில் உள்ள 2 கோயில் திருப்பணிக்கு ரூ. 50 லட்சம் காசோலையை புதுவை முதல்வா் என். ரங்கசாமி, எம்.எல்.ஏ.விடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நிரவி - திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பட்டினத்தில் உள்ள அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் மற்றும் விழிதியூரில் உள்ள வீழிநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிக்கு நிதியுதவி செய்யுமாறு புதுவை முதல்வா் என். ரங்கசாமியிடம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் கோரியிருந்தாா்.

இந்த வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகம், திருப்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயிலுக்கு ரூ. 30 லட்சமும், விழிதியூா் வீழிநாதசுவாமி கோயிலுக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.

இதன்படி துறை அனுமதித்த காசோலையை புதுச்சேரியில் முதல்வா் என். ரங்கசாமி, பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரத்திடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் கூறுகையில், எனது பரிந்துரையை ஏற்று கோயில்களின் திருப்பணிக்கு நிதியுதவி செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த காசோலை சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகத்தினரிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.