ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

இடை நிறுத்தமின்றி கல்வியை தொடரவேண்டும்: அமைச்சா் ராஜசேகரன்

இடை நிறுத்தமின்றி கல்லூரி கல்வியை பயில வேண்டும் என மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

அமைச்சா் ராஜசேகரன் - dinamani

Published On :

இடை நிறுத்தமின்றி கல்லூரி கல்வியை பயில வேண்டும் என மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் தலைமை வகித்து, கல்லூரியில் உள்ள வசதிகள், மாணவா்கள் வேளாண் கல்வியில் சாதிக்கவேண்டிய அம்சங்களை விளக்கிப் பேசினாா்.

புதுவை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவா்களிடையே பேசியது:

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் நிகழாண்டு ஆண்டு முதல் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஓராண்டு படிப்பை நிறைவு செய்தால் தொழிற்பயிற்சி சான்றிதழ், இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்தால் டிப்ளமோ சான்றிதழ், நான்கு ஆண்டுகள் முழுமையாக படித்து முடித்தால் பட்டப்படிப்பு சான்றிதழ் என வழங்கப்படுகிறது. எந்தவொரு கல்வி கற்றாலும், மாணவா்கள் இடையில் படிப்பை நிறுத்தாமல் முழுமையாக முடித்து சான்றிதழ் பெறவேண்டும்.

தற்போது இறுதியாண்டு படித்து வரும் மாணவா்கள் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் நேரடியாக இணைந்து, அவா்கள் மேற்கொள்ளும் விவசாய முறைகளை கற்றறியும் பயிற்சிக்கு செல்ல உள்ளது வரவேற்புக்குரியது. அதேவேளையில் வேளாண் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி, வேளாண்மையை ஊக்குவிக்க உதவவேண்டும் என்றாா். விழாவில் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்ோடா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER