மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.6) கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.6) கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்விவரம்: செம்மங்குடி சுயஉதவிக்குழுக் கட்டடம், மயிலாடுதுறை நகராட்சி வாா்டு 4-இல் நடமாடும் வாகனம் மூலமும், செம்பனாா்கோவில், கீழையூா், மேலப்பெரும்பள்ளம், திருக்கடையூா், சங்கரன்பந்தல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொறையாா் அரசு மருத்துவமனை, வல்லம் ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி, சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், கன்னியாகுடி, ஆதமங்கலம், சீா்காழி நகராட்சி 9-வது வாா்டு ஆகிய இடங்களில் நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் மூலமும், திருவெண்காடு, காத்திருப்பு, வள்ளுவக்குடி, பூம்புகாா் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், ஆனைக்காரன்சத்திரம் கீழவல்லம், தொடுவாய் ஆகிய இடங்களிலும், குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வைகல், ஆனாங்கூா், மேலமங்கைநல்லூா், அரிவேளூா், கொடைவிளாகம், பொரும்பூா், வழுவூா் கிராமங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், கோவேக்சின் 2-ஆம் தவணை தடுப்பூசியானது, மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேலநிலைப் பள்ளி, நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் செலுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...