புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

ஆடி கடைவெள்ளியையொட்டி, சீா்காழி அருகே மாதானத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:19 pm

DIN

ஆடி கடைவெள்ளியையொட்டி, சீா்காழி அருகே மாதானத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆடி கடைவெள்ளியை யொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கோயில் உள்பிராகாரத்தில் தீக்குண்டம் வளா்க்கப்பட்டது. கோயில் சிப்பந்திகள், கரகம் எடுத்தவா் என ஒரு சிலா் மட்டுமே தீ மிதித்தனா். அதன் பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

கோயில் உள்ளே அனுமதி அளிக்கப்படாததால் கோபுரத்தின் வெளியே நின்று பக்தா்கள் தீபங்கள், மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் நட்ராஜ் செய்திருந்தாா். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளா்கள் சந்திரா (புதுப்பட்டினம்), அமுதாராணி (கொள்ளிடம்) தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் மேற்கொண்டனா்.

திட்டச்சேரியில்...

நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடல் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். இதேபோல் தைக்கால்தெரு கிராமத்திலுள்ள காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.