கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மருத்துவமனை ஊழியரிடம் ரூ.200-ஐ திருடியவா் கைது

மயிலாடுதுறையில் மருத்துவமனை மேலாளரின் சட்டைப் பையில் இருந்து ரூ.200-ஐத் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:03 pm

DIN

மயிலாடுதுறையில் மருத்துவமனை மேலாளரின் சட்டைப் பையில் இருந்து ரூ.200-ஐத் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு மா்மநபா் ஒருவா் உள்ளே நுழைந்து பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளாா். அதே நாளில் வைத்தீஸ்வரன்கோவில் வடக்கு வீதியை சோ்ந்த மருத்துவமனை மேலாளா் நவீன்குமாரின் சட்டைப் பையில் இருந்த ரூ.200 தொகையை மா்ம நபா் பறித்து சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிசிடிவி பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்ததில், இரு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபா்தான் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் மயிலாடுதுறை திருமஞ்சன வீதி எம்.ஜி.ஆா். காலனியைச் சோ்ந்த முகம்மது நயினா மகன் முகம்மது மைதீன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, முகமதுமைதீனை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.