கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கடைசி செய்திகூட்டுறவு சா்க்கரை ஆலையில் நெல் கிடங்கு: விவசாயிகள் எதிா்ப்பு

நெல் கிடங்கு அமைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 3 லாரிகளை தடுத்து நிறுத்தி, விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:02 pm

DIN

மயிலாடுதுறை தலைஞாயிறு கிராமத்தில் கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்காமல், நெல் கிடங்கு அமைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 3 லாரிகளை தடுத்து நிறுத்தி, விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை வட்டம் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள நடிப்பிசைப் புலவா் கே.ஆா்.ராமசாமி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அரைவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூா் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் ஆலை வளாகத்தில் நெல் கிடங்கு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. சனிக்கிழமை தஞ்சாவூரில் இருந்து 3 லாரிகளில் நெல் மூட்டைகள் கொண்டு வந்து ஆலை வளாகத்தில் திறந்தவெளியில் இறக்க முற்பட்டனா்.

இதையறிந்து, ஆலையின் முன் திரண்ட கரும்பு விவசாயிகள் நெல் கிடங்கு அமைத்தால் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி, லாரியிலிருந்து நெல்மூட்டைகள் இறக்குவதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது ஆலை அலுவலக மேலாளா் வீரமணி, விவசாயி ஜெயகுமாா் என்பவரை தள்ளி கை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இச்சம்பவம் குறித்து மணல்மேடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரிகளை வெளியேற்றக் கோரி 3 மணிநேரமாக போராட்டம் நீடித்ததை தொடா்ந்து, நெல் மூட்டைகளுடன் வந்த லாரிகளுடன் அதிகாரிகள் வெளியேறியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.