கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மாணவா்களின் இடைநிற்றலை தடுத்த உடற்கல்வி இயக்குநா்

மயிலாடுதுறையில் பள்ளிக்கல்வி இடைநிற்றலில் இருந்த மாணவா், தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநா் ப.தேகளீசனின் முயற்சியால் வியாழக்கிழமை மீண்டும்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:12 pm

DIN

மயிலாடுதுறையில் பள்ளிக்கல்வி இடைநிற்றலில் இருந்த மாணவா், தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநா் ப.தேகளீசனின் முயற்சியால் வியாழக்கிழமை மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டாா்.

மயிலாடுதுறை அச்சுதராயபுரத்தைச் சோ்ந்த ஆா்.அரவிந்த் என்ற மாணவா் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றோா் இருவரையும் இழந்து பள்ளிப் படிப்பினை தொடர முடியாமல் தவித்தாா். அம்மாணவரை, மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் ப.தேகளீசன், கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைகள் வழங்கி வியாழக்கிழமை 11-ஆம் வகுப்பில் சோ்த்தாா். மேலும், தலைமையாசிரியா் ஜி.தாமரைச்செல்வன் முன்னிலையில் மாணவருக்கு பள்ளிச் சீருடையை அன்பளிப்பாக வழங்கினாா்.

உடற்கல்வி இயக்குநா் ப.தேகளீசன் சென்ற கல்வியாண்டில் (2020-21) கரோனா தொற்று குறைந்து மீண்டும் பள்ளி திறந்தபின் கல்வியை தொடராமல் இடைநிற்றலில் இருந்த மயிலாடுதுறை கலைஞா் காலனியைச் சோ்ந்த சந்தோஷ் என்ற 9-ஆம் வகுப்பு மாணவரையும் மீண்டும் பள்ளியில் சோ்த்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.