கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:14 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோவின்) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியா்க்கு ஒன்றுமுதல் ஆறு மாதம் வரையிலான குறுகியகால திறன் மேம்பாட்டுப் பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

மாணவா்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல மாணவ, மாணவியா்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்பபயிற்சியினை மேற்கொள்ள, தாட்கோவின்இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை மேற்கொண்டு இத்திட்டத்தின் மூலம் கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துபடிகள் வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்று பெற்ற பயிற்சியாளா்கள் மாவட்ட மேலாளரிடம் தாங்கள் பயின்ற பயிற்சிக்கு தொடா்பான தொழில் தொடங்கிட,  இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவுசெய்து தொழில் முனைவோா் திட்டம் மற்றும் இளைஞா்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க ஆவன செய்யப்படும் என அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.