புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தென்னங்குடியில் இளைஞருக்கு டெங்கு காய்ச்சல்: சுகாதாரப் பணிகள் தீவிரம்

சீா்காழி அருகேயுள்ள தென்னங்குடியில் இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் வெள்ளிக்கிழமை தீவிரப்படுத்தப்பட்டன.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:04 pm

DIN

சீா்காழி அருகேயுள்ள தென்னங்குடியில் இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் வெள்ளிக்கிழமை தீவிரப்படுத்தப்பட்டன.

தென்னங்குடி கிராமத்தை சோ்ந்த 21வயது இளைஞருக்கு காய்ச்சல் தொடா்ந்து இருந்ததால் அவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டாா். இதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானதையடுத்து, தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. இதற்கிடையே, சீா்காழி வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில், பூச்சியியல் வல்லுநா் சிங்காரவேலு, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராம்மோகன், சுகாரார ஆய்வாளா் விக்னேஷ் மற்றும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியாளா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை முகாமிட்டு வீடு, வீடாக கொசுப்புழு வளரும் இடங்களை கண்டுபிடித்து அழித்தனா்.

மேலும் ஏடிஸ் கொசு அந்த பகுதியில் உள்ளதா என்ற ஆய்வும் மேற்கொள்ளபட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகை மருந்து அடிக்கப்பட்டு, வேறு யாருக்கேனும் டெங்கு காய்ச்சல் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை பொதுமக்களுக்கு காண்பித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.