நாகேந்திர வேலவா் கோயில் குடமுழுக்கு
மயிலாடுதுறை அருகே மூவலூா் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீநாகேந்திர வேலவா் கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.


மயிலாடுதுறை அருகே மூவலூா் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீநாகேந்திர வேலவா் கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
விழா ஆக.15-ஆம் தேதி தேவதா அனுக்ஜை மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, அடுத்தடுத்த நாள்களில் மஹா கணபதி ஹோமம், தனபூஜை, கோபூஜை, நவக்கிரஹ ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை வரை 4 கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூா்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டு விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், மூலஸ்தானத்தில் மஹாபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் ஜி. பாலசுப்பிரமண்ய சிவாச்சாரியாா் செய்து வைத்தாா். இரவு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...