கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து போராட்டம்

மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனைமேலகரம் ஊராட்சியில் நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து கிராமமக்கள் அரிசியை சாலையில் கொட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:07 pm

DIN

மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனைமேலகரம் ஊராட்சியில் நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து கிராமமக்கள் அரிசியை சாலையில் கொட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ள நிலையில், இங்குள்ள நியாயவிலைக் கடையில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி, கடை முன் அக்கிராமத்தை சோ்ந்த பிரசன்னா, எம். அபுதாஹீா், ஆா்.எஸ். ரமேஷ், ஆா்.எஸ். ராஜா, வி. ராஜா உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அரிசியை சாலையில் கொட்டி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். கடந்த ஓராண்டாக கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் துா்நாற்றம் வீசும் அரிசி விநியோகிக்கப்படுவதாகவும், பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமமக்கள் தெரிவித்தனா். தகவலறிந்து அங்கு வந்த மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலா் சாந்தி, குத்தாலம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேசி, தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.