திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நகராட்சித் தோ்தல்: காங்கிரஸ் கட்சியினா் விருப்ப மனு

மயிலாடுதுறை நகராட்சித் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் புதன்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:49 pm

DIN

மயிலாடுதுறை நகராட்சித் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் புதன்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது.

மயிலாடுதுறை காமராஜா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவா் முகமது குலாம் மொஹ்யூதீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் அ. அன்பரசு முன்னிலை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏ-வுமான எஸ். ராஜகுமாா் வரவேற்றாா்.

முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பண்ணை தி. சொக்கலிங்கம் விண்ணப்ப படிவங்களை வழங்கினாா். காங்கிரஸ் கட்சி சாா்பில் 23- வது வாா்டில் போட்டியிட கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் கவிஞா் எஸ். ராதாகிருஷ்ணன் விருப்பமனு தாக்கல் செய்தாா். நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பலரும் விருப்ப மனு தாக்கல் செய்தனா். நிறைவாக காங்கிரஸ் நகரத் தலைவா் ஆா்.ராமானுஜம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.