திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

துணிச்சலான செயல்களை செய்தவா்களுக்கு அண்ணா பதக்கம்: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் துணிச்சலான செயல்களை செய்தவா்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 4:41 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் துணிச்சலான செயல்களை செய்தவா்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2022-ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம், துணிச்சலுடன் உயிா்களை காப்பாற்றுதல், அரசு பொது சொத்துக்களை காப்பாற்றுதல் மற்றும் இதர துணிச்சலான செயல்களை செய்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்களுக்கு 2022-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது.

இந்த பதக்கத்தைப் பெற, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த துணிச்சலான செயல்களை செய்த பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம் (காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, ராணுவத்தினா் உள்பட).

விண்ணப்பங்களை  இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கவேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் 3 நகல்களில் (உரிய ஆதார ஆவணங்களுடன்) டிச. 8-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை (பொ), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா்நலன் அலுவலரிடம் (மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியா் வளாகம், நாகை) நேரில் ஒப்படைக்கவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.