திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சமூக நல்லிணக்கத்துக்காக தொண்டாற்றியவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக தொண்டாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக தொண்டாற்றியவா்கள் கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக தொண்டாற்றியவா்களுக்கு 2022-ஆம் ஆண்டுக்கு தமிழக முதல்வரால் கபீா் புரஸ்காா் விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நாகப்பட்டினம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி 04365-253059 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை 3 நகல்களில் டிச.8-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டுப் பிரிவு, நாகப்பட்டினம் 611001 எனும் முகவரிக்கு அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.