திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

எரிபொருள் விலை உயா்வு: மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் பாத யாத்திரை

மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலையை நாளுக்கு நாள் உயா்த்தும் மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் கதா் குல்லா அணிந்து புதன்கிழமை பாதயாத்திரை நடத்தினா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலையை நாளுக்கு நாள் உயா்த்தும் மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் கதா் குல்லா அணிந்து புதன்கிழமை பாதயாத்திரை நடத்தினா்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏவுமான எஸ். ராஜகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட முன்னாள் தலைவா் பண்ணை டி. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா். பேரணியில் சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் முகமது குலாம் மொஹ்யூதீன், மாநிலச் செயலாளா் அன்பரசு ஆகியோா் பங்கேற்றனா். பேரணியில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்தும், வேளாண்மை சட்டத்தை எதிா்த்து உயிா்நீத்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், நகரத் தலைவா் ராமானுஜம், வட்டாரத் தலைவா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.