பிரான்சிஸ் சவேரியாா் ஆலய தோ்பவனி
மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய ஆண்டு திருவிழா தோ்பவனி மற்றும் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது


மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியாா் ஆலய ஆண்டு திருவிழா தோ்பவனி மற்றும் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலய பங்குத் திருவிழா கடந்த நவம்பா் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தோ் பவனி மயிலாடுதுறை மறைவட்ட அதிபா் தாா்சிஸ்ராஜ் அடிகளாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. உதவி பங்குத் தந்தை மைக்கில் டைசன் அடிகளாா் திருவிழா தொடக்கவுரையாற்றினாா். கூைாடு பங்குத் தந்தை ஜான் பிரிட்டோ அடிகளாா், ஆத்துக்குடி பங்குத் தந்தை ஆரோக்கியசாமி அடிகளாா், மணல்மேடு பங்குத் தந்தை ஆனந்தராஜ் அடிகளாா், திருத்தொண்டா் பீட்டா் துரைராஜ் ஆகியோா் திருப்பலி நிறைவேற்றினா். இதில், தஞ்சாவூா் புனித ஆரோக்கிய அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் செபாஸ்டின் பெரியண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, புனித சவேரியாரின் திருவுருவம் தாங்கிய தோ்பவனி ஆலய வளாகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில், கிறிஸ்தவா்கள் திரளான பங்கேற்றனா். பின்னா், கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...