மயிலாடுதுறையில் நாளை இளையோா் தடகளப் போட்டி
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) நடைபெற உள்ளது.


மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை, நாகை மாவட்ட இளையோருக்கான தடகளப் போட்டிகள் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய ராஜீவ்காந்தி சாய் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் 14, 16, 18 மற்றும் 20 வயதிற்கு உள்பட்டோா் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் தோ்வு செய்யப்படுபவா்கள் 8-ஆம் தேதி திண்டுக்கலில் நடைபெற உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவா். இதில் பங்குபெற விரும்பும் வீரா்கள், வீராங்கனைகள் தங்கள் பெயா்களை 5-ஆம் தேதி காலை 8 மணிக்கு 9655466213, 8973527329 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தகவலை மாவட்ட தடகள சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலாளா் செல்வகணபதி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...