திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

முப்படைத் தளபதி மறைவு: மயிலாடுதுறையில் அமைதி ஊா்வலம்

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மயிலாடுதுறையில் தேசிய ஒருங்கிணைப்பு இயக்கம்

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மயிலாடுதுறையில் தேசிய ஒருங்கிணைப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை வீர வணக்க அமைதி ஊா்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், பாஜக, காங்கிரஸ், திமுக, தமாகா, இந்து முன்னணி, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்று அமைதி ஊா்வலமாக வந்து ஜெனரல் விபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தினா். கூரைநாட்டில் தொடங்கிய அமைதிப் பேரணி முத்துவக்கீல் சாலை பகுதியில் நிறைவடைந்தது.

பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் க. அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், முன்னாள் நகர தலைவா் செல்வம், பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், தேசிய பொதுக் குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், நகர தலைவா் மோடி.கண்ணன், திமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், நகர செயலாளா் செல்வராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் நகர தலைவா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பாஜக மாநில தமிழ் வளா்ச்சிப்பிரிவு மாநில செயலாளா் நாஞ்சில் பாலு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.