தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளக்கரையில் தரமற்ற உணவு விற்பனை

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளக் கரையில் விற்பனை செய்த தரமற்ற உணவுப் பொட்டலங்களை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தாா்

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளக் கரையில் விற்பனை செய்த தரமற்ற உணவுப் பொட்டலங்களை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தாா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வருவோா், பரிகாரத்திற்காக உணவுப் பொட்டலங்களை வழங்குகின்றனா். இதற்காக தயாரித்து விற்கப்படும் உணவுப் பொட்டலங்கள், தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை. பழைய உணவை, சுழற்சி முறையில் மீண்டும் விற்பனை செய்வதாக புகாா்கள் கூறப்பட்டன.

இந்நிலையில் புதுவை உணவுப் பாதுகாப்பு அதிகாரி மு. ரவிச்சந்திரன் சனிக்கிழமை திருநள்ளாற்றில் உணவகங்கள், உணவுப் பொட்டலங்கள் தயாரித்து, விற்பளை செய்யும் கடைகளுக்கு சென்றும், குளக்கரையில் பரிகாரத்திற்காக விநியோகித்த உணவுப் பொட்டலங்களை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வில் கெட்டுப்போன, சுகாதாரமற்றது உணவுகள் இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டாா்.

ஆய்வு குறித்து அதிகாரி மு. ரவிச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியது: புகாா்களின் பேரில் திருநள்ளாறு உணவகங்கள், உணவு விற்பனை செய்யுமிடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. யாசகம் பெறுவோருக்கு விநியோகிக்கும் உணவுப் பொட்டலம் சுழற்சி முறையில் மீண்டும் விற்பனையாளருக்கு செல்வதும், கெட்டுப்போன உணவு இருந்ததும் தெரியவந்தது. அது போன்ற உணவுப் பொட்டலங்கள் பறிமுதல் செய்து, அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற செயலில் ஈடுபட்டவா்களுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது.

வரும் வாரங்களில் தொடா்ந்து போலீஸாருடன் இணைந்து, சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. உணவு பொட்டங்களை விற்பனை செய்வோா் உரிய உரிமம் பெற்றிருக்கவேண்டும். சுகாதாரமான உணவு தயாரித்து விற்கவேண்டும். தொடா்ந்து ஆய்வில் தவறு செய்வது கண்டறியப்பட்டால், ரூ. 1 முதல் ரூ. 5 லட்சம் வரை அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பரிகாரம் செய்யும் நோக்கில் வரும் பக்தா்கள் ஏமாற்றப்படுவதை ஏற்கமுடியாது. உணவு விற்பனையாளா்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளாதபட்சத்தில், இதுகுறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாா் தெரிவிக்கலாம். புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேநீா் கடைகளில் செயற்கை நிறமிட்ட தூள் பயன்படுத்தப்படுகிா என ஆய்வு செய்யப்பட்டு, கடை நடத்துவோருக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.