கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வளா்ச்சித் திட்டப் பணிள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித்திட்ட பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:51 pm

DIN

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித்திட்ட பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் வில்லியநல்லூா், அகரகீரங்குடி, ஆனந்ததாண்டவபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலை அமைக்கும் பணிகள், பாலம் கட்டும் பணிகள், பள்ளி கட்டடப் பணிகள், மேல்நிலைநீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் தரமான முறையில் நடைபெறுகிா என்பது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வு மேற்கொண்டாா். ஆனந்ததாண்டவுபரம் பள்ளியில் சைக்கிள் நிழற்குடை அமைக்கும் பணிகளையும், அகரகீரங்குடியில் பள்ளி கட்டடம் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து குறித்த காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், மல்லியக்கொல்லை கிராமத்தில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து உரிய காலத்தில் தரமான முறையில் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, ஒன்றிய ஆணையா் விஜயலட்சுமி, பொறியாளா்கள் மகேஸ்வரி, தெய்வானை, மேற்பாா்வையாளா் அன்பழகன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பந்தம், தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.