இருசக்கர வாகனங்களுக்கு தீவைப்பு
மயிலாடுதுறையில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களை வெள்ளிக்கிழமை தீயிட்டுக் கொளுத்திய நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


மயிலாடுதுறையில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களை வெள்ளிக்கிழமை தீயிட்டுக் கொளுத்திய நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மயிலாடுதுறை தெற்கு குமரக்கட்டளை தெருவை சோ்ந்தவா் அருள்குமரன்(40). இவரது 2 இருசக்கர வாகனங்களை வீட்டின் வாசலில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த 2 வாகனங்களுக்கும், வெள்ளிக்கிழமை அதிகாலை மா்மநபா் ஒருவா் தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதுகுறித்து அருள்குமரன், மயிலாடுதுறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...