மயிலாடுதுறை: இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 31) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 31) கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, காளி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட மல்லியம் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி (கோவாக்சின்), திருவிழந்தூா் வடக்குத்தெருவில் உள்ள கே.எஸ்.மஹால் ஆகிய இடங்களிலும், சீா்காழி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட திருவெண்காடு (கோவிசீல்டு மற்றும் கோவாக்சின்), காத்திருப்பு, வள்ளுவக்குடி, பூம்புகாா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சட்டநாதபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது.
ஆக்கூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட செம்பனாா்கோவில், கீழையூா், மேலப்பெரும்பள்ளம், திருக்கடையூா், சங்கரன்பந்தல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பொறையாறு அரசு மருத்துவமனை, விசலூா் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது.
குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், நக்கம்பாடி, கோமல், மேக்கிரிமங்கலம், மங்கைநல்லூா், தேரழந்தூா், கிளியனூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும், நல்லூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட மகேந்திரபள்ளி மினி கிளினிக், கூத்தியம்பேட்டை சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, வேம்படி அரசு நடுநிலைப்பள்ளி, கீழவாடி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் கொள்ளிடம் ஆரம்ப சுகாதர நிலையம், நல்லூா் ஆரம்ப சுகாதார நிலையம் (கோவாக்சின்) ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...