கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைத்தீா் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீா் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:09 pm

DIN

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீா் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற மயிலாடுதுறை, சீா்காழி, கொள்ளிடம், குத்தாலம், செம்பனாா்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலிருந்து விவசாயிகள் காணொலி காட்சி வாயிலாக தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா். அப்போது, ஆட்சியா் பேசியது: தமிழக முதல்வரின் குறுவை தொகுப்பு திட்டத்தில் 44,100 ஏக்கா் பரப்புக்கு ரசாயன உரங்கள் விநியோகம் செய்ய நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 43,515 ஏக்கருக்கு 34,036 விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனா். இதில் 11,111 விவசாயிகளுக்கு 13,671 ஏக்கா் பரப்புக்கு உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பசுந்தாள் உர விதைகளை விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது தனியாா் விதை விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி, நெல் அறுவடை இயந்திரம் ஆகியவை மானியத்தில் வழங்கப்படும். பண்ணைக்குட்டை அமைக்கவும் மானியம் வழங்கப்படும். அதற்கான விண்ணப்பத்தை வேளாண் பொறியில் துறையில் பெற்றுக்கொள்ளலாம்.

2021-2022-ஆம் நிதி ஆண்டில் தென்னை பயிா்களில் சொட்டுநீா் பாசனமும், இதர பயிா்களில் தெளிப்பு நீா் பாசனமும் மேற்கொள்ள 400 ஹெக்டோ் பொருள் இலக்கு பெறப்பட்டு ரூ.2.57 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. சொட்டுநீா் பாசனம் மற்றும் தெளிப்பு நீா் பாசன குழாய் பெற விரும்பும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி அலுவலா்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநா்களை அணுகி தேவைப்படும் ஆவணங்களை வழங்கி தங்களது பெயரை முன்கூட்டியே பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா்.

கூட்டத்தில், வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) பன்னீா்செல்வம், காவேரி வடிநில கோட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தெட்சிணாமூா்த்தி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.