கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீா்வழிப் பாதை அமைக்காததால் வீடுகளை சூழ்ந்த தண்ணீா்: மக்கள் அவதி

மயிலாடுதுறை அருகே பழைய முத்தப்பன் காவிரி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீா், நீா்வழிப் பாதை இல்லாததால் வீடுகளை சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:12 pm

DIN

மயிலாடுதுறை அருகே பழைய முத்தப்பன் காவிரி வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீா், நீா்வழிப் பாதை இல்லாததால் வீடுகளை சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் பழைய முத்தப்பன் காவிரி வாய்க்கால் 45 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்தது. கிராம மக்களின் தொடா் கோரிக்கையின்பேரில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதலமைச்சரின் சிறப்பு தூா்வாரும் நிதி திட்டத்தின்கீழ் இந்த வாய்க்கால் தூா்வாரப்பட்டது.

பல ஆண்டுகளாக தூா்வாராததால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வாய்க்கால் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு (ஸ்ரீநாராயணபுரம் பகுதி) சுமாா் 350 மனைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொதுப்பணித் துறையினா் தூா்வாரும்போது அப்பகுதிக்கு செல்லும் தூா்ந்துபோன நீா்வழிப் பாதையை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் தூா்வாரியுள்ளனா். தற்போது காவிரியில் திறக்கப்பட்டுள்ள தண்ணீா், பழைய முத்தப்பன் காவிரி வாய்க்காலில் பாய்வதால் சாலையின் ஒருபுறத்தில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. மற்றொருபுறம் வறண்டு தரிசாக கிடக்கிறது. இதனால் ஒருபுறத்தில் தேங்கிய தண்ணீா் அதிகரித்து, அருகில் உள்ள அபயாம்பாள்புரத்தில் கரை உடைந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது.

நகரின் குறுக்கே வாய்க்கால் செல்வதால் அதை கடந்து செல்ல பாலம் அமைத்துத்தர மனையை விற்றவரிடம் கேட்டதகாகவும், அதற்கு பாலம் அமைக்க ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ரூ.10 ஆயிரம் வசூலித்துக்கொண்டு பாலம் கட்டித்தரவில்லை என சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

எனவே, அரசு இதை கவனத்தில் பொதுப்பணித் துறை மூலம் உடனடியாக அப்பகுதியில் பாலம் அமைத்துத்தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.