திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

துலாக்கட்ட காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி: தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

துலா உத்ஸவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரியில் மாயூரநாதர், மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகள் காவிரிக்கரையில் எழுந்தருளினர்.

News image

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கங்கை அம்மன் சமேத மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Updated On :4 நவம்பர் 2021, 12:54 pm

DIN

துலா உத்ஸவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரியில் மாயூரநாதர், மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகள் காவிரிக்கரையில் எழுந்தருளினர். இதில், தருமபுரம் ஆதீனம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி வழிபட்டனர். 

மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உத்ஸவம்  மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். துலா மாதமான ஐப்பசி மாதத்தில், கங்கை முதலான புண்ணிய நதிகள் காவிரி துலாக்கட்டத்தில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொண்டதாகவும், ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் கங்கைக்கு மாயூரநாதர் சுவாமிகளும், மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சியளித்தாக ஐதீகம்.

Story image

இதனால், வருடத்தில் ஒருநாள் ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் மட்டும் வதான்யேஸ்வரர் கோயிலில் இருந்த கங்கை அம்மன் சமேத மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகள் காவிரி வடகரையில் எழுந்தருள்வது வழக்கம்.
அமாவாசை தீர்த்தவாரியையொட்டி மாயூரநாதர் கோயிலிலில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மாயூரநாதர் சுவாமியும், வதான்யேஸ்வரர் கோயிலில் இருந்து வெள்ளி கைலாய வாகனத்தில் மேதா தட்சிணாமூர்த்தி சுவாமியும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் மற்றும் விஸ்வநாதர் கோயில், ஐயாறப்பர் கோயில்களில் இருந்து சுவாமி அம்பாளுடன் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர்.

Story image

பின்னர், அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.