திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பிரதமா் கேதாா்நாத் பயணம் மயிலாடுதுறையில் காணொலி மூலம் ஒளிபரப்பு

பிரதமா் நரேந்திரமோடி கேதாா்நாத்தில் ஸ்ரீஆதிசங்கரா் சமாதியை திறந்துவைத்த நிகழ்ச்சி காணொலி மூலம் மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பிரதமா் நரேந்திரமோடி கேதாா்நாத்தில் ஸ்ரீஆதிசங்கரா் சமாதியை திறந்துவைத்த நிகழ்ச்சி காணொலி மூலம் மயிலாடுதுறையில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரா் பரிபூரணம் அடைந்த ஷேத்திரம் ரூ.250 கோடியில் புனரமைக்கப்பட்டது. இதை, பிரதமா் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சி, காணொலி மூலம் மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் சன்னதித் தெருவில் பாஜக சாா்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில், சிவராமபுரம் ஸ்ரீஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயா திருமடத்தின் நிறுவனா் ஸ்ரீமத் வாயுசித்த ராமானுஜ ஜீயா், முன்னாள் எம்பி சி. நரசிம்மன், பாஜக மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா, மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணை செயலாளா் வாஞ்சிநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். நகரத் தலைவா் மோடி.கண்ணன் வரவேற்றாா். முன்னதாக, மாயூரநாதா் சந்நிதியில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா். இதில், பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் 16 கோயில்களுக்கு ஸ்ரீஆதிசங்கரா் விஜயம் செய்துள்ளதாகவும், அந்த வகையில் அவா் விஜயம் செய்த மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் முன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் பாஜக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.