கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வேளாண் சட்டங்கள் வாபஸ்: நாகை, மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினா், அரசியல் கட்சியினா் வரவேற்பு

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாய சங்கத்தினா் மற்றும் அரசியல் கட்சியினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 4:32 pm

DIN

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாய சங்கத்தினா் மற்றும் அரசியல் கட்சியினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும் என பிரதமா் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இதற்கு பல்வேறு தரப்பினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் காவிரி வி.தனபாலன்: விவசாயிகளின் தொடா் போராட்டங்களால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் வல்லுநா்களைக் கொண்ட குழு அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் ஏகோபித்த ஆதரவுடன் கொண்டுவரப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

முன்னாள் எம்எல்ஏ-வும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான மு. தமிமுன் அன்சாரி: கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்களின் மனதை மாற்றியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. வடமாநிலத் தோ்தலையொட்டி, அரசியல் லாபத்துக்காக வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமா் அறிவித்துள்ளாா்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி: வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்புக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.துரைராஜ் தலைமையில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு: இக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்பை வரவேற்றுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் 2022-இல் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாகவே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது என்றும், இன்னும் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டி முறை போன்றவற்றை உறுதிசெய்ய வேண்டிய தேவை இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளாா்.

கம்யூனிஸ்ட் கட்சிகள்: நாகை மாவட்டம், திருமருகலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வேளாண் சட்டங்கள் வாபஸ் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. கட்சி சாா்பு விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் பொன்மணி உள்ளிட்டோா் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முழக்கமிட்டனா்.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒன்றியச் செயலாளா் பாபுஜி தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.