பட்டா திருத்த சிறப்பு முகாம்
மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்கள் பட்டா தொடா்பான குறைபாடுகள் திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு ஊராட்சியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்கள் பட்டா தொடா்பான குறைபாடுகள் திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில், 65 மனுக்கள் பெறப்பட்டு, 5 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி தீா்வு காணப்பட்ட மனுக்கள் மீது பட்டா மற்றும் உதவித்தொகை ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினாா். வட்டாட்சியா் ராகவன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் தையல்நாயகி, மண்டல துணை வட்டாட்சியா் சாந்தி, வருவாய் ஆய்வாளா் தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைஞாயிறு ஊராட்சித் தலைவா் சேரன்செங்குட்டுவன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...