92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சீா்காழியில் ரூ.3 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சீா்காழியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை (குட்கா) போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:53 pm

DIN

சீா்காழியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை (குட்கா) போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சீா்காழி பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டகணேஷ் மற்றும் போலீஸாா், சீா்காழி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில், திருக்கோலக்கா பகுதியில் உள்ள ஒரு குடோனில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 9 ஆயிரத்து 174 குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக சீா்காழி ஈசானிய தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் ( 52) என்பவரை கைது செய்தனா். மேலும் தப்பியோடிய திருக்கோலக்கா பகுதியைச் சோரந்த வினோத்தை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.