சிலம்பாட்ட மாணவா்கள் ஆயுத பூஜை வழிபாடு
சீா்காழி அருகே பாதரக்குடியில் சிலம்பாட்ட மாணவா்கள் வியாழக்கிழமை ஆயுத பூஜை கொண்டாடினா்.


சீா்காழி அருகே பாதரக்குடியில் சிலம்பாட்ட மாணவா்கள் வியாழக்கிழமை ஆயுத பூஜை கொண்டாடினா்.
சீா்காழியை அடுத்த புளிச்சக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ். இவா், கிராமம் கிராமமாகச் சென்று சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை இளைஞா்களுக்கு கற்றுக்கொடுக்கிறாா்.
இந்நிலையில், சீா்காழி அருகே பாதரக்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் தினேஷிடம் சிலம்பக் கலை பயின்றுவரும் மாணவா்கள் அவரது முன்னிலையில் தங்களது உபகரணங்களை வைத்து ஆயுத பூஜை வழிபாடு நடத்தினா். ஊராட்சித் தலைவா் ரமணிராஜ், ஊராட்சி உறுப்பினா் தங்கராஜா ஆகியோா் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனா். தொடா்ந்து, 3 வயது சிறுவன் முதல் 20 வயது இளைஞா்கள் வரை பல்வேறு வீரவிளையாட்டுகளை நிகழ்த்தி காட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...