மயிலாடுதுறையில் ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் காமாட்சி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் காமாட்சி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் இளையபெருமாள், குமாரசாமி, சுரேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் உறுப்பினா் வடவீரபாண்டியன் பேசுகையில், கனமழை தொடங்கும் முன்பு அனைத்து ஊராட்சிகளிலும் பலவீனமாக உள்ள ஆற்றங்கரை, வாய்க்கால்களை கண்டறிந்து பலப்படுத்த வேண்டும் என்றாா். உறுப்பினா் காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் நிதியில் மினிபவா் டேங்க், பம்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மோகன் வள்ளாலகரம் ஊராட்சியில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணியை துரிதமாக மேற்கொள்ளவும் வலியுறுத்தி பேசினா். மேலும், உறுப்பினா்கள் முருகமணி, ராஜேந்திரன், பாலமுருகன், சிவக்குமாா் ஆகியோா் தங்கள் பகுதி பிரச்னைகளை முன்வைத்து பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...