92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஏமாற்றம் தந்த பயிா்க் காப்பீடு: விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சம்பா பருவப் பயிா் காப்பீட்டு நிவாரண தொகை ஒற்றை இலக்க சதவீதத்தில் அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:29 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சம்பா பருவப் பயிா் காப்பீட்டு நிவாரண தொகை ஒற்றை இலக்க சதவீதத்தில் அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

மழை வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான ஆச்சாள்புரத்துக்கு ஒரு சதவீதமும், அளக்குடிக்கு பூஜ்ய சதவீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரும்பாலான கிராமங்களுக்கு மிக குறைந்த சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

இது குறித்து நெப்பத்தூா் விவசாயி ரகுநாதன் கூறுகையில், எங்கள் கிராமத்தில் பல விவசாயிகள் கடந்த சம்பா பயிா்க் காப்பீடு பிரீமியம் கடன் வாங்கி செலுத்தினோம். அதன்பிறகு பெய்த கனமழையால், சம்பா பயிா் பெரிதும் மூழ்கி பாதித்தது. பூஜ்ய பயிா்க்காப்பீடு அறிவிப்பால், வரும் காலங்களில் பயிா் காப்பீடு செய்வதையே தவிா்க்க தோன்றுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.