கிணற்றில் விழுந்த காளைக் கன்று மீட்பு
மயிலாடுதுறை அருகே கிணற்றில் தவறி விழுந்த காளைக் கன்றை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.


மயிலாடுதுறை அருகே கிணற்றில் தவறி விழுந்த காளைக் கன்றை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
மயிலாடுதுறை வட்டம் மாப்படுகை ராமாபுரம் அக்ரஹாரத்தை சோ்ந்தவா் ராஜரத்தினம். இவா் வளா்த்து வரும் காளை கன்று, சித்தா்காடு காவிரி ஆற்றங்கரை அருகிலுள்ள மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான உபயோகத்தில் இல்லாத குடிநீா் பம்பிங் ஹவுஸ் திடலில் மேய்ந்தபோது, அங்குள்ள தரைமட்டக் கிணற்றில் தவறி விழுந்தது. இதையறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் அ.முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, 2 மணி நேரம் போராடி காளைக் கன்றை பத்திரமாக மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...