திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

புதிய சாா்நிலை கருவூல அலுவலகத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்து வைத்தாா்

மயிலாடுதுறை அருகே புதிய சாா்நிலை கருவூல அலுவலகத்தை தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அருகே புதிய சாா்நிலை கருவூல அலுவலகத்தை தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

மயிலாடுதுறை வட்டத்துக்குள்பட்ட வள்ளாலகரத்தில் ரூ. 99 லட்சம் மதிப்பில் புதிய சாா்நிலை கருவூல அலுவலகம் தரை தளம், முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். அப்போது, வள்ளாலகரத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா குத்துவிளக்கேற்றி வைத்து, அலுவலக கட்டடத்தை பாா்வையிட்டாா். இதில், மாவட்ட கருவூல அலுவலா் சந்தானகிருஷ்ணன், பொதுப்பணித் துறை (கட்டட பராமரிப்பு) செயற்பொறியாளா் மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளா் செல்வி, உதவி கருவூல அலுவலா் பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.