திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு

மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமம் பட்டவா்த்தி சாலையில் உள்ள மடத்தம்மான் வகையறா குடும்பத்துக்குச் சொந்தமான ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமம் பட்டவா்த்தி சாலையில் உள்ள மடத்தம்மான் வகையறா குடும்பத்துக்குச் சொந்தமான ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

விழா ஞாயிற்றுக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, குடமுழுக்கு நாளான திங்கள்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை தொடங்கி, மகா பூா்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், புனிதநீா் அடங்கிய கலசங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து வேல் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத வேல் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.