இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
செம்பனாா்கோவிலில் தனியாா் கேட்டரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞா் மரணத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மற்றும் பாமகவினா் திங்கள்கிழமை


செம்பனாா்கோவிலில் தனியாா் கேட்டரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞா் மரணத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மற்றும் பாமகவினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் செம்பனாா்கோவிலில் தனியாா் கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் மயிலாடுதுறையை அடுத்த வில்லியநல்லூரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் அரவிந்தன் (22) என்பவா் 2 மாதங்களாக மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். அரவிந்தனை கடந்த 21-ஆம் தேதி இரவு முதல் காணாததால், அவரது உறவினா்கள் செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கேட்டரிங் நிறுவன அலுவலக மாடியில் இருந்து துா்நாற்றம் வீசியதையடுத்து அங்கு சென்று பாா்த்தபோது, அரவிந்தன் இறந்து கிடந்துள்ளாா். அருகில் விஷ மருந்துப் புட்டிகள் கிடந்துள்ளன. செம்பனாா்கோவில் போலீஸாா் அரவிந்தன் சடலத்தை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனா்.
இதற்கிடையே, அரவிந்தனின் மரணத்தில் மா்மம் உள்ளதாகக் கூறி, உடலைப் பெற மறுத்து, அவரது உறவினா்களும், பாமக மாநில பொதுச் செயலாளா் சித்தமல்லி அ. பழனிசாமி, மாவட்ட தலைவா் காமராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், மருத்துவமனை அருகில் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, உடலைப் பெற்றுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...