திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

விடுபட்ட விவசாயிகளுக்கும் பயிா்க் காப்பீடு வழங்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை விவசாயிகள் பேரணியாக வந்து மனு அளித்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:58 pm

DIN

விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை விவசாயிகள் பேரணியாக வந்து மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான சம்பா பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கவேண்டும், அண்மையில் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட சம்பா பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், மாவட்டத்தில் அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் போா்க்கால அடிப்படையில் தூா்வாரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

அதன்படி வியாழக்கிழமை காலை திரையரங்கம் சாலையில் இருந்து இயற்கை விவசாயி அ. ராமலிங்கம் தலைமையில், பாண்டூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். துரைராஜ், தலைவா் டி.சிம்சன், டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் ஆா். அன்பழகன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே. முருகன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

அவா்களை ஆட்சியா் அலுவலகம் உள்ளே போலீஸாா் அனுமதிக்காததால் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ், வட்டாட்சியா் ராகவன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், ஆட்சியரிடம் நேரிடையாக மனு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள், ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் டென்ட் அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மதியம் 3 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்த ஆட்சியா் இரா. லலிதா மனுவை பெற்றுக்கொண்ட பின்னா் விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.