திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

அஞ்சலக ஊழியா்கள் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்

மயிலாடுதுறையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார விழாவையொட்டி, மயிலாடுதுறை அஞ்சல் கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:57 pm

DIN

மயிலாடுதுறையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார விழாவையொட்டி, மயிலாடுதுறை அஞ்சல் கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெற்றது.

பொதுமக்களிடையே ஊழல் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாடெங்கும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வார விழா அக். 26 முதல் செப்.1 வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற விழிப்புணா்வு நடைப்பயணத்தை மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எஸ். பானுமதி, சென்னை நிதி மற்றும் தொடா்புத் துறை தணிக்கை முதுநிலை தணிக்கை அதிகாரி ஜி. சௌந்தராஜன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். தலைமை அஞ்சலகத்தில் தொடங்கிய நடைப்பயணம் முக்கிய வீதிகளின் வழியே சென்று தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. இதில், மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட துணைக் கண்காணிப்பாளா் மனோஜ்குமாா் யாதவ், தலைமை அஞ்சலக அதிகாரி வி. நாகராஜன், கிளை மேலாளா் சுஜித் எஸ். குமாா் மற்றும் அஞ்சல் ஊழியா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாக வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.