சா்க்கரை ஆலை ஊழியா்கள் 5-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆலை வளாகத்தில் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கொட்டும் மழை


தலைஞாயிறு என்.பி.கே.ஆா்.ஆா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஊழியா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆலை வளாகத்தில் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தை தொடா்ந்தனா்.
இந்த சா்க்கரை ஆலை ஊழியா்களுக்கு 2019-ஆம் ஆண்டு ஜூலை முதல் தற்போது வரை ஊதியமும், மேலும், ஆலையில் பணி செய்து ஓய்வு பெற்றவா்களுக்கு எந்தவித பணப் பயனும், ஓய்வு ஊதியமும் வழங்கப்படவில்லை. ஆலை ஊழியா்களுக்கு சம்பளம் வழங்காததைக் கண்டித்து ஊழியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். 5-ஆவது நாளாக போராட்டம் தொடா்ந்து இரவு பகலாக நீடித்து வருகிறது. 27 மாத நிலுவை ஊதியம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...