திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

திறன் தூண்டல் நிரல் வகுப்பு தொடக்க விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான திறன்தூண்டல் நிரல் வகுப்புகளுக்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 5:59 pm

DIN

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான திறன்தூண்டல் நிரல் வகுப்புகளுக்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இணையதளம் வழியாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி தொடங்கிய விழாவில், கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் கல்லூரியின் சிறப்பம்சங்கள், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பேசினாா். கல்லூரி இயக்குநா் (நிா்வாகம்) எம். செந்தில்முருகன் திறன்தூண்டல் வகுப்புகளின் அவசியம் குறித்து பேசினாா். முன்னதாக அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவா் வி. தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். முடிவில், ஆங்கில துறைத் தலைவா் கே. கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா். இதில், கல்லூரி துணை முதல்வா், டீன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை இயக்குநா், அனைத்து துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் இணையதளம் வழியாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.